​​ நடுக்காட்டில் குழந்தையைப் பெற்று, தொப்புள் கொடியை கற்களால் துண்டித்த அவலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுக்காட்டில் குழந்தையைப் பெற்று, தொப்புள் கொடியை கற்களால் துண்டித்த அவலம்

நடுக்காட்டில் குழந்தையைப் பெற்று, தொப்புள் கொடியை கற்களால் துண்டித்த அவலம்

Sep 12, 2018 7:21 AM

நடுக்காட்டில் குழந்தையைப் பெற்று, தொப்புள் கொடியை கற்களால் தட்டித் துண்டித்த அவலம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள கொடாபா என்ற கிராமத்தைச் சேர்ந்த சோடிப்பள்ளி முத்தயம்மா என்பவர் நிறைமாத கர்ப்பமாக இருந்தார். அவரது கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் மருத்துவமனைக்கு வரவேண்டும். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த முத்தயம்மாவை கிராம மக்கள் தூளி கட்டி தூக்கிச் சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது முத்தயம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருடன் வந்திருந்த பெண்கள், சிசுவின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு எதுவும் இல்லாததால் அருகில் கிடந்த கற்களை எடுத்து தட்டித் தட்டித் துண்டித்துள்ளனர்.

பின்னர், முத்தயம்மாவை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கும், சிசுவுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.