​​ உலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்

Sep 12, 2018 7:16 AM

உலகின் மிகப் பெரிய ஷோரூமை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நிறுவியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங், பெங்களூருவின் தெற்குப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் ஷோரூமை அமைத்துள்ளது.

மேலும் இதுபோன்ற பிரம்மாண்டமான ஷோரூம்களை மேலும் 10 நகரங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவன உதவித் தலைவர் மோகன்தீப் சிங் கூறினார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மிகப் பெரிய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தை சாம்சங் நிறுவனம் நொய்டாவில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.