​​ நாக்பூரில் காளி மர்பத் திருவிழாக் கோலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாக்பூரில் காளி மர்பத் திருவிழாக் கோலம்

நாக்பூரில் காளி மர்பத் திருவிழாக் கோலம்

Sep 12, 2018 7:14 AM

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடல்போல் திரண்ட பக்தர்கள் மத்தியில் காளி வடிவத்திலான உருவம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. காளிமர்பத் என்றழைக்கப்படும் இத்திருவிழா நம் ஊர் ஆடிமாதத் திருவிழாக்கள் போல் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டவர் உட்பட பலர் நடனமாடியபடியே இந்த ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்

தீமை எத்தனை வலிமையுடன் இருந்தாலும் அறத்தின் காளி அவதாரம் அதனை அழித்துவிடும் என்று உணர்த்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. வெள்ளையரைப் பணிய வைத்த கருப்பர் படைக்கு தலைமை தாங்கிய போன்ஸ்லா ராணி பன்காபாயின் உருவம் காளியின் உருவத்துடன் ஒப்பிட்டு வழிபாடு செய்யப்படுகிறது.