​​ ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சனம்

ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சனம்

Sep 12, 2018 7:10 AM

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டித்தழுவ ஓடோடி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வருமான வரி அதிகாரிகளைக் கண்டால் தலைதெறிக்க ஓடுவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2011-12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மறு ஆய்வு செய்ய, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடைவிதிக்க கோரிய காங்கிரஸ் கட்சியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் கட்சியின் அடியாழம் வரை ஊழல் புரையோடி கிடப்பதாக கூறினார். யாராக இருந்தாலும் வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று கூறிய அவர்,  வருமான வரித்துறை அதிகாரிகளைக் கண்டால் ராகுல் காந்தி அலறியடித்து ஓட்டம் எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.