​​ ஆரணி டவுன் கோட்டை கைலாசநாதர் கோயிலில் நீதிபதி ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆரணி டவுன் கோட்டை கைலாசநாதர் கோயிலில் நீதிபதி ஆய்வு

ஆரணி டவுன் கோட்டை கைலாசநாதர் கோயிலில் நீதிபதி ஆய்வு

Sep 12, 2018 7:02 AM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை கயிலாசநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு நடத்தினார்.

தூசிகள் படிந்திருந்த இடத்தை தன் கைகளாலேயே நீதிபதி சுத்தம் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நகைகளை கையாடல் செய்திருப்பதாக நீதிபதியிடம் பக்தர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் குறைகள் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

இதே போன்று சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் மாவட்ட நீதிபதி மோகன்ராஜ் திடீரென ஆய்வு செய்தார். அவருடன் சிவில் நீதிபதி தங்கமணி கணேசன் மற்றும் மக்கள் நீதிமன்ற நீதிபதி ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர். கோவிலுக்கு வேறென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்று பக்தர்களிடம் நீதிபதி மோகன்ராஜ் கேட்டார். கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து குருக்களிடம் நீதிபதி கேட்டறிந்தார் .