​​ பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி, போப்பாண்டவருக்கு கடிதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி, போப்பாண்டவருக்கு கடிதம்

பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி, போப்பாண்டவருக்கு கடிதம்

Sep 12, 2018 6:56 AM

ஜலந்தர் தேவாலய பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி தமது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போப்பாண்டவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஜலந்தரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் ஃபிரான்கோ மூலக்கல் தன்னை இரண்டாண்டுகளில் 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், பேராயர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் இந்த விவகாரத்தை தேவாலய நிர்வாகம் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் தமக்கு பணம் கொடுத்து பிரச்சினையை புதைக்க முயற்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார். கத்தோலிக்க தேவாலயம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதால் இப்பிரச்சினையில் தலையிடுமாறு அவர் வாட்டிகனில் உள்ள போப்பாண்டவர் பிரான்சிசுக்கு ஏழு பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு தேவை என்றும் அந்த கடிதத்தில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தம் மீதான புகார்கள் அபாண்டமானவை பேராயர் மறுத்துள்ளார். கத்தோலிக்க தேவாலயத்திற்கு எதிரான சிலர் இதன் பின்னணியில் இருப்பதாக அவர் மதரீதியான சர்ச்சையை கிளப்ப முயற்சித்துள்ளார். ஆயினும் பேராயருக்கு எதிராக கேரளத்தில் கண்டனப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன