​​ கடுமையான மின்வெட்டை தமிழக மக்கள் சந்திக்க நேரிடும் -மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடுமையான மின்வெட்டை தமிழக மக்கள் சந்திக்க நேரிடும் -மு.க.ஸ்டாலின்

கடுமையான மின்வெட்டை தமிழக மக்கள் சந்திக்க நேரிடும் -மு.க.ஸ்டாலின்

Sep 12, 2018 6:53 AM

விரைவில் கடுமையான மின்வெட்டை சந்திக்கக் கூடிய நிலைமைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் நடந்த ஊழல்களால் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியளிக்கிறது என்றும் மின்பகிர்மான கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை நீக்கி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்குமாறும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.