​​ ஊழியர் மயங்கியதைத் தொடர்ந்து மாறி மாறி கொள்ளையடித்த இளைஞர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழியர் மயங்கியதைத் தொடர்ந்து மாறி மாறி கொள்ளையடித்த இளைஞர்கள்

ஊழியர் மயங்கியதைத் தொடர்ந்து மாறி மாறி கொள்ளையடித்த இளைஞர்கள்

Sep 12, 2018 6:41 AM

அமெரிக்காவில் கேஸ் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்ததையடுத்து மாறி மாறி கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாஷிங்டன் மாகாணத்தில் ஷெல் கேஸ் நிரப்பும் நிறுவனத்திற்கு சொந்தமான கடை ஒன்றில் இரு இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். அப்போது இளைஞர்களுக்கும், கடை ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கடை ஊழியர் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்ததார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து தப்பிச் சென்ற இந்த இளைஞர்கள் அடுத்தடுத்து மூன்றுமுறை கடைக்குள் புகுந்து சாவகாசமாக பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளையின் சிசிடிவு பதிவுகளை வைத்து போலீசார் அந்த இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.