​​ உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்

Sep 12, 2018 6:37 AM

உலகின் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றான கிரே திமிங்கலம் மனிதர்களுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. வடக்கு பசிபிக் கடலில் சில ஆராய்ச்சியாளர்களும், சார்லஸ் ஹேம்மர் என்ற ஒளிப்பதிவாளரும் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிரே திமிங்கலம் ஒன்றைக் கண்ட அவர்கள் அதனருகில் சென்றனர்.

அப்போது இவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாக படகை உரசிக் கொண்டு வந்த திமிங்கலம், மனிதர்கள் தன்னை தொட அனுமதித்தது.

அப்போது ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து கேமராவைக் கண்டதும் தனது வாயைத் திறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கிரே திமிங்கலம். 15 மீட்டர் நீளமும், 36 டன் எடையும் கொண்ட திமிங்கலத்தின் இந்த விளையாட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.