​​ இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

Sep 12, 2018 6:36 AM

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

image

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. 

இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்வதாக  அறிவித்தது.

464 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, தவான், புஜாரா, கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ராகுல்- ரிஷப் பந்த் நிதானமாக விளையாடி சதம் அடித்தனர். 

ராகுல் 149 ரன்களும், பந்த் 114 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 345 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் 4க்கு ஒன்று என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியுள்ளது.