​​ ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் பலி

Sep 12, 2018 6:31 AM

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு நங்கர்ஹார் ((Eastern Nangarhar)) என்ற இடத்தில் உள்ள காவல் அதிகாரியைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த தீவிரவாதி ஒருவன் தான் மறைத்து வைந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இந்தத் தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 130க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.