​​ லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...

லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...

Sep 12, 2018 6:29 AM

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். இடைத்தரகர் செந்தில் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் டவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 35 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, பாபுவின் இடைத்தரகராக செயல்பட்ட செந்தில்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் 15 க்கும் மேற்பட்ட வங்கிகணக்குகள் மற்றும் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து செந்திகுமாரின் மனைவி மங்கையர்கரசியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.