​​ திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்

Sep 12, 2018 6:22 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்குவதையொட்டி,  முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி முதல் நாளான இன்று அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதில் பங்கேற்று, அரசு சார்பில் கோவிலுக்கு பட்டு அஸ்திரங்கள் சமர்ப்பிக்க உள்ளார்.

பிரமோற்சவத்தையொட்டி நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளைகளிலும் மலையப்ப ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வரும் 17ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க சுமார் ஏழு லட்சம் லட்டுகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன அனைத்து சேவைகள், விஐபி தரிசனம், முன்னுரிமை தரிசனம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூபாய் 300 சிறப்பு தரிசனம் மற்றும் சர்வ தரிசனத்தில் குறைந்த அளவில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவார்கள்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் திருப்பதிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று தொடங்கியது.
வண்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட திருமாலின் தசாவதார ரதங்களுடன், 11 திருக்குடைகள் சென்னகேசவப் பெருமாள் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.பூக்கடையில் இருந்து யானைக் கவுனி தாண்டிய திருக்குடைகள், சூளை, பட்டாளம் வழியாக கொண்டு செல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வழிபட்டனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு திருப்பதி குடைகளை தரிசித்தார்.