​​ சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எழுச்சி பெற்று புதிய இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திரமோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எழுச்சி பெற்று புதிய இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திரமோடி

Published : Sep 11, 2018 8:59 PM

சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எழுச்சி பெற்று புதிய இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திரமோடி

Sep 11, 2018 8:59 PM

சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எழுச்சி பெற்று புதிய இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 3000 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் இனி 4000 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவார்கள் எனவும் அறிவித்தார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், மேற்கு வங்கத்தின் பேளூர் ராமகிருஷ்ண மடத்தின் துணை தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய அதே நேரத்தில் பிரதமர் மோடி, அரங்கில் கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். என் இனிய சகோதர, சகோதரிகளே எனக்கூறி பிரதமர் தனது உரையை துவங்கினார்.

சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எழுச்சி பெற்று புதிய இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.  நாடு முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் அடல் டிங்கர் ஆய்வுக்கூடங்கள்  அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். தமிழக அரசும் தமிழக மக்களும் மத்திய அரசின் முத்ரா திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி இருக்கின்றனர் எனவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.  

இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் எனப்படும் ஆஷா பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது 3000 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் இனி 4000 ஆயிரம் ரூபாயும் 2,200 ரூபாய் மதிப்பூதியம் பெறுபவர்கள் இனி 3,500 ரூபாயும் பெறுவார்கள் என்றும் பிரதமர் அறிவித்தார். அனைத்து ஆஷா பணியாளர்களுக்கும் வழக்கத்தை விட இரண்டு மடங்கு ஊக்கத் தொகையும் இலவசக் காப்பீடும் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.