​​ திருப்பதி பிரம்மோற்சவம் : ஏற்பாடுகள் தீவிரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி பிரம்மோற்சவம் : ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதி பிரம்மோற்சவம் : ஏற்பாடுகள் தீவிரம்

Sep 11, 2018 7:31 PM

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 9 நாட்களும் 2 மலைப் பாதைகளும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் பிரம்மோற்சவத்தில் பங்கேற்று அரசு சார்பில் பட்டாடைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், 650 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

image

7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்து சேவைகளும் வி.ஐ.பி தரிசனம் உட்பட அனைத்து முன்னுரிமை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கார வளைவுகளும் மின்விளக்கு அலங்காரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.