​​ ஒரு கையில் அரிவாள்..! மறு கையில் தலை..! அதிர்ந்த காவல் நிலையம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு கையில் அரிவாள்..! மறு கையில் தலை..! அதிர்ந்த காவல் நிலையம்

ஒரு கையில் அரிவாள்..! மறு கையில் தலை..! அதிர்ந்த காவல் நிலையம்

Sep 11, 2018 7:22 PM

கர்நாடக மாநிலத்தில் கண்டிப்பையும் மீறி காதலனை சந்திக்க சென்ற மனைவியை வெட்டிக் கொன்ற டாக்சி டிரைவர் ஒருவர், துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலம், சிக்மகளூரு அடுத்த அஜம்பூரா காவல் நிலையத்திற்கு கையில் அரிவாள் மற்றும் சாக்கு பையுடன் இளைஞர் ஒருவர் வந்தார். தனது பேச்சை கேட்காமல் காதலனை சந்திக்க சென்ற தனது மனைவியை கொலை செய்து தலையை அறுத்து கையுடன் எடுத்துக்கொண்டு சரண் அடைய வந்திருப்பதாக அவர் , தெரிவித்ததால் அங்கிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்

டாக்சி டிரைவரான அவர் பெயர் சதீஷ். ரூபா என்ற பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரூபாவுக்கு சுனில் என்ற கூலித்தொழிலாளியுடன் ரகசிய காதல் ஏற்பட்டுள்ளது. மனைவியை பலமுறை கண்டித்த போதும் ஏதாவது பொய்யான காரணங்களை கூறிவிட்டு காதலன் சுனிலை சந்தித்து வந்துள்ளார் ரூபா..!

சம்பவத்தன்று இருவரும் தனிமையில் சந்தித்ததை பார்த்துவிட்ட சதீஷ், ஆத்திரத்தில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். அதற்குள்ளாக ரகசிய காதலன் சுனில் தப்பி ஓடிவிட்டதால், மனைவியை வெட்டிய அரிவாள் மற்றும் மனைவியின் தலையுடன் சம்பவ இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் சதீஷ் என்கின்றனர் காவல்துறையினர்.

குடும்பத்தினரையும் உற்றார், உறவினரையும் உதறிவிட்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட தனக்கு , காதல் மனைவி துரோகம் செய்ததால் தீர்த்து கட்டியதாக டாக்சி டிரைவர் சதீஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.