​​ பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மனைவி மரணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மனைவி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மனைவி மரணம்

Sep 11, 2018 6:33 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி புற்றுநோயால் மரணமடைந்தார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நவாசின் மனைவியான குல்சூம் பேகம் தொண்டை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசடைந்ததால் அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக நவாஸ் செரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும், நவாஸ் செரிப்பின் தம்பியுமான சபாஸ் செரீப் கூறியுள்ளார். 68 வயதான குல்சூம் பேகத்தின் இறுதி சடங்குகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் மரண செய்தி சிறையில் உள்ள நவாஸ் செரீப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.