​​ ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

Sep 11, 2018 6:16 PM

 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான  மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர்  மாசு குறித்த  மத்திய நிலத்தடி நீர் வாரிய  ஆய்வு அறிக்கையில்,  நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தடைவிதிக்க  கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு  உத்தரவிட்டது.