​​ 18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா? - உயர்நீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா? - உயர்நீதிமன்றம்

Published : Sep 11, 2018 6:15 PM

18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா? - உயர்நீதிமன்றம்

Sep 11, 2018 6:15 PM

18 ஆண்டு கோமா நோயாளி வீட்டுக்குச் சென்று தொடர் சிகிச்சை மூலம் மீட்க முடியுமா என ஆசாரிபள்ளம் மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு, ஆதர்ஷா என்ற பெண் எழுதிய கடிதத்தில் 18 ஆண்டுகளுக்கு முன் தனது தாயார் சோபனாவுக்கு பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்றதாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தை தங்களை பிரிந்துவிட்ட நிலையில் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார். தவறான சிகிச்சை தொடர்பாக இழப்பீடு கோரிய வழக்கு மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், தனது படிப்பு மற்றும் தனது தாயாரின் சிகிச்சை செலவுகளுக்கு பணம் இன்றி தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், சோபனாவை கோமாவில் இருந்து மீட்க முடியுமா என்றும் இல்லையெனில் கருணைக் கொலை செய்ய முடியுமா என்றும் மருத்துவர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.