​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர் எண்ணிக்கை 27% குறைந்துள்ளது

Published : Mar 14, 2018 7:15 PM



அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர் எண்ணிக்கை 27% குறைந்துள்ளது

Mar 14, 2018 7:15 PM

அமெரிக்காவுக்குக் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 27விழுக்காடு குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் கல்வி பயிலச் சென்ற மாணவர்களுக்காக 65ஆயிரத்து 257 விசாக்கள் வழங்கப்பட்டிருந்தன. இது கடந்த ஆண்டு 47ஆயிரத்து 302ஆகக் குறைந்தது.

இது முந்தைய ஆண்டைவிட 27விழுக்காடு குறைவாகும். இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் கல்வி பயிலச் சென்ற வெளிநாட்டினர் எண்ணிக்கையும் 16விழுக்காடு குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 5லட்சம் பேருக்குக் கல்வி பயில்வதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு 4லட்சத்து இருபதாயிரம் பேருக்கே கல்வி பயில்வதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது.