​​ குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணத்தை செப்.30க்குள் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணத்தை செப்.30க்குள் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்

Published : Sep 11, 2018 6:00 PM

குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணத்தை செப்.30க்குள் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்

Sep 11, 2018 6:00 PM

குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் வருகிற 30ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், இணைப்பு துண்டிக்கப்படும் என, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணத்தை சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்களிலும் நேரில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.chennaimetrowater.tn.nic.in இணையதள மூலமாக, டெபிட், கிரடிட் கார்டுகள் மூலமாகவும் செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

காலதாமதமாக செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அபராதமாக, மேல்வரி, மாதம் 1 புள்ளி 25 விழுக்காடு, நுகர்வோர் செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30ஆம் தேதிக்குள், கட்டணங்களை செலுத்தாவிட்டால், இணைப்புத் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.