​​ கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் பலி, 14 பள்ளி குழந்தைகள் காயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் பலி, 14 பள்ளி குழந்தைகள் காயம்

கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் பலி, 14 பள்ளி குழந்தைகள் காயம்

Sep 11, 2018 4:53 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் பலியானார்.

வெள்ளிமலையில் இருந்து கருமந்துரை நோக்கி, பிரபாவதி பள்ளிக்குச் சொந்தமான வேன் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. வேனை வெங்கடேசன் என்ற ஓட்டுனர் இயக்கி வந்தார். மொட்டையனூர் கிராமம் அருகே சென்றபோது, வேனின் முன் பக்க அச்சு முறிந்து, சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் 3 முறை உருண்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனின் ஓட்டுனர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 14 பள்ளி மாணவ -மாணவிகள் படுகாயம் அடைந்து, மாவடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டனர். அவர்களை வருவாய் கோட்டாச்சியர் தினேஷ், சந்தித்து ஆறுதல் கூறினார்.