​​ நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து மாயமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் மீட்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து மாயமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் மீட்பு

Published : Sep 11, 2018 4:31 PM

நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து மாயமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் மீட்பு

Sep 11, 2018 4:31 PM

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து மாயமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

தங்கத்தால் செய்யப்பட்டு வைரம் பதிக்கப்பட்ட உணவுப் பாத்திரம், கப், சாசர் மற்றும் ஸ்பூன் காணாமல் போனது. இந்நிலையில் அருங்காட்சியக சாளரத்தில் இருந்த கைரேகைகளைக் கொண்டு முகமது கவுஸ் மற்றும் முகமது முபீன் என்ற இருவரை கைது செய்த போலீசார், காணாமல் போன பொருட்களை கைப்பற்றினர்.

முன்னதாகவே வேவுபார்த்து அருங்காட்சியக சி.சி.டி.வி. அமைப்பை தெரிந்துகொண்ட இருவரும், சாளரம் வழியாக கயிற்றைக் கட்டி இறங்கியதும், சி.சி.டி.வியில் சிக்காமல் அலமாரியை உடைத்து பொருட்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இவற்றை மும்பையில் விற்க முயன்ற அவர்கள் பேரம் படியாததால் மீண்டும் ஹைதராபாத்துக்கே கொண்டு வந்த நிலையில் தற்போது அவை மீட்கப்பட்டுள்ளன.

நிஜாமே அந்தப் பாத்திரங்களை உணவு உண்ண பயன்படுத்தியிருப்பாரா என சந்தேகம் எழுப்பிய போலீசார், ஆனால் திருடர்கள் அதில் உணவை இட்டு உண்டதாகக் கூறியுள்ளனர்.