​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2018-2019 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு

Published : Mar 14, 2018 7:09 PM



2018-2019 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு

Mar 14, 2018 7:09 PM

பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, ராணுவத்தை நவீனப்படுத்துவதற்குப் போதாது என ராணுவத்தின் துணைத் தளபதி சரத் சந்த் தெரிவித்துள்ளார். 2018-2019 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு இரண்டு லட்சத்து 95ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்று புள்ளி ஐந்து எட்டு விழுக்காடாகும். இது குறித்துப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவிடம் கருத்துத் தெரிவித்துள்ள ராணுவத் துணைத் தளபதி சரத் சந்த், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு 21ஆயிரத்து 388கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நடப்புத் திட்டங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையே 29ஆயிரத்து 33கோடி ரூபாயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.