​​ 110 செண்டிமீட்டர் உயரமே கொண்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
110 செண்டிமீட்டர் உயரமே கொண்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை

110 செண்டிமீட்டர் உயரமே கொண்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை

Sep 11, 2018 3:40 PM

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக 110 செண்டிமீட்டர் உயரமே கொண்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தண்டராம்பட்டை அடுத்த குப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான உமாமகேஸ்வரி, 110 செண்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்டவர். இவரது கணவர் மாரியப்பனும் மாற்றுத் திறனாளி என்று கூறப்படும் நிலையில், பிரசவத்துக்காக உமாமகேஸ்வரி கடந்த 4ஆம் தேதி அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். எலும்பு வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்ட உமாமகேஸ்வரிக்கு மூச்சுத் திணறல் உட்பட பிரசவத்துக்குத் தடையாக ஏராளமான சிக்கல்கள் இருந்துள்ளன.

மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ராஜேஸ்வரி தலைமையிலான மருத்துவர் குழு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர். மருத்துவமனைக்கு நேரில் வந்து குழந்தையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குழந்தைக்கு ஒரு சவரன் தங்கச் சங்கிலியை அணிவித்ததோடு, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்வதற்கான உறுதிக் கடிதத்தையும் வழங்கினார்.