​​ தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், இணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், இணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், இணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

Sep 11, 2018 3:28 PM

தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசின் திட்டத்துடன் இணைந்து செயல்படும் போது சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழைக் குடும்பங்களில் உள்ள 2 கோடியே 85 லட்சம் பேர் 5 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணமில்லா மருத்துவ சேவையை பெற முடியும்.

இந்த ஒப்பந்தம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் கையெழுத்தானது.