​​ கர்ப்பிணி பெண்ணை கொன்று, சூட்கேசில் சடலத்தை அடைத்து தெருவில் வீசிய தம்பதி கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்ப்பிணி பெண்ணை கொன்று, சூட்கேசில் சடலத்தை அடைத்து தெருவில் வீசிய தம்பதி கைது

கர்ப்பிணி பெண்ணை கொன்று, சூட்கேசில் சடலத்தை அடைத்து தெருவில் வீசிய தம்பதி கைது

Sep 11, 2018 3:17 PM

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, சடலத்தை சூட்கேசில் அடைத்து, தெருவில் வீசிச் சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நொய்டாவில் பிஸ்ராக் பகுதியில் சவுரப் திவாகர் - ரீத்து தம்பதி வாடகைக்கு குடியிருந்தனர். அதே வளாகத்தில், புதிதாக திருமணமான சிவம் - மாலா தம்பதியும் வசித்தனர். கர்ப்பிணியான மாலா, பெற்றோர் கொடுத்த நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆடைகளை ரீத்துவிடம் காண்பித்துள்ளார். மறுநாள் சிவம் வேலைக்குச் சென்றதும், மாலாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த ரீத்து தம்பதி, உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து எடுத்துக் கொண்டு, நகை, விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் மாலாவின் செல்போன் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் உடல் இருந்த சூட்கேசை தெருவில் வீசிய தம்பதி, மறுநாள், ஒன்றும் தெரியாததுபோல் வீட்டுக்கு வந்துள்ளனர். இதனிடையே, உடலைக் கைப்பற்றிய போலீசார், உரிய விசாரணை நடத்தி சவுரப் திவாகர் - ரீத்து தம்பதியை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த நகை மற்றும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.