​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

Published : Mar 14, 2018 7:01 PM



காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

Mar 14, 2018 7:01 PM

தேனி மாவட்டக் காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்குத் தொடர்ந்து தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கிக் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நால்வரையும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பார்த்து உடல் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தரமான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.