​​ UPSC இணையதளத்தை நள்ளிரவில் முடக்கிய ஹேக்கர்கள் அதில் டோரிமான் கார்டூன்களை பதிவிட்டு கிண்டல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
UPSC இணையதளத்தை நள்ளிரவில் முடக்கிய ஹேக்கர்கள் அதில் டோரிமான் கார்டூன்களை பதிவிட்டு கிண்டல்

UPSC இணையதளத்தை நள்ளிரவில் முடக்கிய ஹேக்கர்கள் அதில் டோரிமான் கார்டூன்களை பதிவிட்டு கிண்டல்

Sep 11, 2018 2:58 PM

மத்திய அரசின் யுபிஎஸ்சி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அதில் டோரிமான்((Doraemon)) கார்டூனை பதிவிட்டனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுப் பணியாளார்களை தேர்வு செய்யும் அமைப்பான, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், upsc.gov.in என்ற இணையதளத்தை, நள்ளிரவில் ஹேக்கர்கள் முடக்கினர். அதில் பிரபல கார்டூனான டோரிமானின் படத்தை பதிவிட்டு கிண்டல் செய்திருந்தனர். 'டோரிமான் பிக் அப் தி கால்' என்ற வாசகமும், ஐயம் ஸ்டுப்பிட் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்து.

பல மணி நேரத்திற்கு பிறகு, மத்திய அரசின் கவனத்திற்கு இது தெரியவந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவினர், பல மணி நேரம் போராடி, இன்று காலை, UPSC இணையதளத்தை மீட்டு, பயன்பாட்டுக் கொண்டுவந்தனர்.