​​ நபார்டு வங்கியின் இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சிக் கருத்தரங்கை செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நபார்டு வங்கியின் இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சிக் கருத்தரங்கை செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்

நபார்டு வங்கியின் இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சிக் கருத்தரங்கை செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்

Sep 11, 2018 2:25 PM

விவசாயிகளுக்கு விரைவாகவும் எளிதாகவும் பயிர்க்கடன் அளிக்கும் வகையில் நபார்டு வங்கி நடத்தும் இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சிக் கருத்தரங்கை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு என்பது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன்பெறும் விவசாயிகளின் விவரங்களை பராமரிக்கும் பயிர்க்கடன் பேரேட்டில் உள்ள தகவல்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணினிகளில் பதிவேற்றம் செய்வதாகும்.

இது தொடர்பாக நபார்டு வங்கி கடந்த ஜனவரி முதல் இதுவரை 44 பயிற்சிகளை நடத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜு பயிற்சிக் கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.