​​ இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மனநலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது : விஜயபாஸ்கர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மனநலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது : விஜயபாஸ்கர்

Published : Sep 11, 2018 2:15 PM

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மனநலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது : விஜயபாஸ்கர்

Sep 11, 2018 2:15 PM

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், மாவட்ட மனநலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை ஒட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தற்கொலை தடுப்பு காப்பாளர் பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சிக்கான கையேட்டை வெளியிட்ட அமைச்சர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் துணையாக வருவோருக்கு பயணக் கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் மூலம் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.