​​ பாரிமுனையில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம் - கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் முழக்கமிட்டு வழிபாடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரிமுனையில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம் - கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் முழக்கமிட்டு வழிபாடு

பாரிமுனையில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம் - கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் முழக்கமிட்டு வழிபாடு

Sep 11, 2018 2:13 PM

திருப்பதி திருக்குடை உற்சவ ஊர்வலம் சென்னை பாரிமுனையில் இருந்து இன்று புறப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் சார்பில் வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவஸ்தானத்திடம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 16 திருக்குடைகள், ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கொண்டு செல்லப்படுகிறது. இன்று காலை பாரிமுனை சென்ன கேசவ பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்ட திருக்குடையைக் கண்டு பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா என முழக்கமிட்டனர்.  யானை கவனி, அயனாவரம் திருமுல்லைவாயல், திருவள்ளூர் வழியாக ஊர்வலம்சென்று 16ஆம் தேதி திருமலையை அடைகிறது.