​​ மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை

மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை

Sep 11, 2018 2:05 PM

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

சென்றவாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 1200 ரூபாய்க்கும், 250ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் முல்லைப்பூ, ஜாதிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.