​​ நில ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து கொலை மிரட்டல் - ஆட்சியரிடம் பட்டதாரி புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நில ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து கொலை மிரட்டல் - ஆட்சியரிடம் பட்டதாரி புகார்

Published : Sep 11, 2018 1:52 PM

நில ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து கொலை மிரட்டல் - ஆட்சியரிடம் பட்டதாரி புகார்

Sep 11, 2018 1:52 PM

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே நில ஆக்கிரமிப்பு பிரச்சனையில் தங்களை ஊரைவிட்டே ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி இளைஞர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான இளையாப்பிள்ளை தனக்குச் சொந்தமான 69 செண்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலத்தை அவ்வூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, ராஜீவ்காந்தி, முனுசாமி, சண்முகம் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. 4 பேர் மீதும் சங்கராபுரம் காவல்நிலையத்தில் இளையாப்பிள்ளை புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இளையாப்பிள்ளை குடும்பத்தினரை ஊரைவிட்டே ஒதுக்கிவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பக்கத்து கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியுள்ள இளையாப்பிள்ளை குடும்பத்தினர் ஊருக்குள் வந்தாலோ, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முயற்சித்தாலோ கொலை செய்துவிடுவோம் என நால்வர் கூட்டணி மிரட்டுவதாக இளையாப்பிள்ளை கூறுகிறார். இதனையடுத்து குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.