​​ ரிலையன்ஸ் ஜியோ போன்களில் WhatsApp வசதி அறிமுகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிலையன்ஸ் ஜியோ போன்களில் WhatsApp வசதி அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ போன்களில் WhatsApp வசதி அறிமுகம்

Sep 11, 2018 1:50 PM

ரிலையன்ஸ் ஜியோ போன்களில் வாட்ஸ் அப் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

வாட்ஸ் ஆப்பின் புதிய மென்பொருள் கீ பேடுடன் கூடிய ஜியோ வகை போன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் இதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்ஃபோன் எண்ணை ஓடிபி மூலம் உறுதி செய்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும்.

இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஜியோ ஃபோன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் சாட்டிங்கை குழுவாகவோ அல்லது தனி நபருடனோ மேற்கொள்ள முடியும் என்று வாட்ஸ் அப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜியோ ஃபோன்களுக்கான வாட்ஸ் அப் மென்பொருள் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றாலும் அது வரும் 20-ஆம் தேதி முதல் முறைப்படி செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜியோ போன் குறித்த தகவல்களை பெற 1991 என்றா ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கபட்டுள்ளது.