​​ முதன் முறையாக வீடியோ வெளியிட்ட மெஹுல் சோக்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதன் முறையாக வீடியோ வெளியிட்ட மெஹுல் சோக்சி

முதன் முறையாக வீடியோ வெளியிட்ட மெஹுல் சோக்சி

Sep 11, 2018 1:25 PM

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள மெஹுல் சோக்சி, தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள அவர் ஆண்டிகுவா நாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், ஆண்டிகுவா நாட்டில் இருந்த படி மெஹுல் சோக்சி பேசிய வீடியோவை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தம் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், அடிப்படை ஆதாரமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். தம்முடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றும் மெஹுல் சோக்சி தெரிவித்துள்ளார்.