​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூபாய் 10 லட்சம் நிதி

Published : Mar 14, 2018 6:52 PM



ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூபாய் 10 லட்சம் நிதி

Mar 14, 2018 6:52 PM

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஒக்கி புயலின்போது உயிரிழந்த 27 தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் ஏற்கெனவே 5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் ஒக்கி புயலின்போது, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் குறித்து, அறிக்கை தயாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு தயாரித்த அறிக்கையின்படி, 177 மீனவர்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஒக்கி புயலின்போது உயிரிழந்துவிட்டதாக கருதி, அவர்களது குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், ஒக்கி புயலின்போது மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவியை வழங்கினார்.

முதற்கட்டமாக தலா ஒவ்வொரு மீனவரின் குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மீதம் 10 லட்சம் ரூபாய் 6 மாத கால அவகாசத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் வைப்பு நிதியாக வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.