​​ பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

Sep 11, 2018 1:13 PM

சென்னை பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாயத் தலைவர் கண்ணன் வழங்கினார்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே தீர்ப்பாயம்,  ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ரயில்வே தீர்ப்பாயத் தலைவர் கண்ணன் உயிரிழந்த நவீன்குமார், சிவக்குமார், பாரத், வேல்முருகன், ஸ்ரீவத்சன் ஆகியோரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா 8 லட்சம் ரூபாயை செலுத்துவதற்கான ஆணையை வழங்கினார். படுகாயம் அடைந்த விஜயகுமாருக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், விக்னேஷுக்கு 2 லட்சம் ரூபாய், மற்றும் முகமது யாசர், நரேஷ்குமார் ஆகியோருக்கு தலா 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான ஆணையையும் அவர் வழங்கினார்.