​​ ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடங்களை குறைக்க நடவடிக்கை?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடங்களை குறைக்க நடவடிக்கை?

ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடங்களை குறைக்க நடவடிக்கை?

Sep 11, 2018 12:57 PM

ராணுவத்தில் ஆயுத பலத்தைப் பெருக்குவதற்காக, படை பலத்தைக் குறைக்க மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

13 லட்சம் வீரர்களுடன் உலக அளவில் படை பலம் மிக்க ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவம் திகழ்ந்து வருகிறது.

ஆனால் இதே படை பலத்திற்காக செலவிடப்படும் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட செலவீனங்களால் நிதிச்சுமை அதிகரித்து நவீன மயமாக்கலுக்கு சிறிய அளவிலேயே நிதி கிடைப்பதாகவும், ஆயுதங்கள் பழமையாகவே இருப்பது கவலை அடையச் செய்யும் அம்சமாக இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை கருதுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ராணுவத்தில் ஒன்றரை லட்சம் பணியிடங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் செலவினத்தில் சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்களும், 2022- 2023ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பணியிடங்களும் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த லெட்டினண்ட் ஜெனரல்கள் 4 பேர் கொண்ட குழு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆய்வறிக்கையை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஆராய்ந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.