​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Sep 11, 2018 12:41 PM

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

Sep 11, 2018 12:41 PM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 20ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. அதற்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படவுள்ள இடத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், அதனாலேயே அமைச்சரவை தீர்மானம் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதை ஏற்க முடியாது எனக் கூறிய அவர், கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு என்ற அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை தரவில்லை எனவும் குறிப்பிட்டார்.