​​ மதுரையில் ஆபத்தான நிலையில் காணப்படும் அரசுப் பேருந்துகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் ஆபத்தான நிலையில் காணப்படும் அரசுப் பேருந்துகள்

Published : Jan 23, 2018 11:05 AM

மதுரையில் ஆபத்தான நிலையில் காணப்படும் அரசுப் பேருந்துகள்

Jan 23, 2018 11:05 AM

மதுரையில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மண்டேலா நகர் செல்லும் பேருந்தின் தரைப்பகுதி மிகவும் சேதமுற்று, அமர்ந்திருப்பவர்களை அச்சுறுத்துகிறது. பின்வாசல் படிக்கட்டின் அருகே, கைப்பிடிக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பி, பாதி உடைந்து அந்தரத்தில் நிற்கிறது.

இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நேரிடும் அபாயம் இருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இதுபோன்ற நிலையே இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.