​​ புதுச்சேரியில் மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

Published : Sep 11, 2018 12:35 PM

புதுச்சேரியில் மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

Sep 11, 2018 12:35 PM

புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத்துவார கட்டமைப்பை மறு சீரமைக்க கோரி, 400க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் மூலம், 18 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று, மீன்பிடித்து வருகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட இந்த மீன்பிடி துறைமுக முகத்துவாரம், ஒவ்வொரு ஆண்டும் மண் மூடி தூர்ந்து விடுவதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் முகத்துவாரத்தில் மண் சேர்ந்ததால், சில படகுகள் சேதமடைந்தன. இதைக் கண்டித்து  400க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் காரணமாக, தினசரி 1 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.