​​ திம்பம் மலைப்பாதையில் நடுவழியில் நின்ற கண்டெய்னர் லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திம்பம் மலைப்பாதையில் நடுவழியில் நின்ற கண்டெய்னர் லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் நடுவழியில் நின்ற கண்டெய்னர் லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Sep 11, 2018 12:33 PM

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நடுவழியில் நின்ற கண்டெய்னர் லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ராஜஸ்தானிலிருந்து குளிர்சாதனபெட்டிகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி, கோவை  செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. 19வது கொண்டை ஊசி அருகே சென்றபோது லாரியின் பின்சக்கரம் பாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சிக்கி நின்றது.

இதன் காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்லமுடியாமல், பல கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வரிசையாக நின்றன. 4 மணி நேரத்திற்கு பிறகு லாரியின் பழுது நீக்கப்பட்டதையடுத்தே போக்குவரத்து சீரானது.