​​ கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

Sep 11, 2018 12:14 PM

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கலைஞரின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. சிலையை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது.

தீனதயாளன் என்பவர் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சிலையின் மாதிரி வடிவத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிற்பக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிலையை பார்வையிட்டபின், அதில் சிற்சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் மு.க.ஸ்டாலின் கூறினார்.