​​ அரசு குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது 2 தொழிலாளர்கள் தவறி விழுந்து பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது 2 தொழிலாளர்கள் தவறி விழுந்து பலி

அரசு குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது 2 தொழிலாளர்கள் தவறி விழுந்து பலி

Sep 11, 2018 12:11 PM

சென்னை சைதாப்பேட்டையில் அரசு குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக கட்டிடப் பொறியாளரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கடந்த ஓராண்டாக பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான 10 மாடிக் குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்புக் கட்டிடத்துக்கான லிஃப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூரைச் சேர்ந்த பிரவீண், கோவிந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் நேற்று 10-வது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரும் திடீரெனத் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கட்டுமானப் பணியின் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாரம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என பொறியாளர் ஜெயப்பிரகாஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.