​​ ”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Sep 11, 2018 12:04 PM

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும், குடிநீருக்குக் கூட தண்ணீர் திறக்கவில்லை என்றும், மேகதாதுவில் அணைக் கட்டினால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், குற்றஞ்சாட்டப்பட்டாலே அவர் குற்றவாளியாகிவிட மாட்டார் என குறிப்பிட்டார். இதேபோல், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வேண்டுமென்றே, திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பலம் பொருந்திய கட்சி என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம் எனக் கூறிய அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்றார். 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.