​​ மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு

Published : Sep 11, 2018 11:29 AM

மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு

Sep 11, 2018 11:29 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  மீண்டும் ரயில்வே மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதால், ரயில் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், இலுப்பையூர் பகுதியில், கட்டிடம் ஒன்றின் பிளாஸ்டிக் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை பெயர்ந்து விழுந்து, ரயில்வே மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னை தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மின் இணைப்பு தற்காலிகமாக சரிசெய்யப்பட்ட நிலையில் 7 மணி நேரத்திற்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன.