​​ இமானுவேல்சேகரனின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இமானுவேல்சேகரனின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Published : Sep 11, 2018 10:03 AM

இமானுவேல்சேகரனின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Sep 11, 2018 10:03 AM

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் இமானுவேல்சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது.

அவரது 61வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோர் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்லவும், வாடகை மற்றும் திறந்தவெளி வாகனங்களில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெடிபொருட்கள், ஆயுதங்களுக்கு தடை விதித்துள்ள மாவட்ட நிர்வாகம், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும், ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூடுதல் டிஜிபி விஜயகுமார் தலைமையில், தென் மண்டல ஐ.ஜி., 4 டி.ஐ.ஜி.க்கள், 17 எஸ்.பி.க்கள், 28 டி.எஸ்.பி.க்கள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.