​​ ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Published : Sep 11, 2018 9:16 AM

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Sep 11, 2018 9:16 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹந்த்வாரா ((Handwara)) பகுதியில் குளூரா ((Guloora))  என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.