​​ மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை

Sep 11, 2018 7:10 AM

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரியின் குறுக்கே 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில மேகதாது அணையைக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே, கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுடன் காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.